Posts

Showing posts from 2018

....a moment in egmore railway station

தினசரிதான் கடந்துபோய்க்கொண்டிருக்கிறேன் அதே மனிதர்கள் அதே குரல்கள் அதே அழைப்புகள் இன்று வண்டி நின்ற இடமும் உட்கார்ந்திருந்த ஓரமும் அவர் நின்றிருந்த தோரணையும் யோசிக்க வைத்தது சுவற்றில் ஒட்டியிருக்கும் பல்லி போலத்தான் படியின் ஓரத்தில் மற்றவர்களுக்கு தொல்லையில்லாதபடி பர்பி அஞ்சு ரூபாய் இரண்டு பத்து ரூபாய் இடைவெளி விட்டு தடையில்லாத அழைப்புகள் இவர்கள் மற்றவர்களைப்போல் அல்ல தனக்கான வாழ்க்கையை தினசரி கட்டமைத்துக்கொள்கிறார்கள் பருவ மாறுதல்கள் இயற்கை உபாதைகள் ஹல்திராம்ஸ் லேய்ஸ் வகையறாக்கள் என எல்லாவற்றையும் கடந்து வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் குரல் அழைப்புகளை மட்டும் குறைத்துக் கொண்டதில்லை இரண்டு மூன்று நிறுத்தங்கள் சென்றபின் ஓரிடத்தில் குழுமும் மாற்றுத்திறனாளிகள் புறவைகளின் சரணாலயம் வேடந்தாங்கல் காணாதவர்களின் சரணாலயம் சைதாப்பேட்டை நடைமேடை

..while on a trip to rameswaram

தாமதமாகி விட்டதென்று அவசரமாகப் படியிறங்கி செல்கையில் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி யாசகம் கேட்கிறார் முன்பொருமுறை இதுபோல் இராமேஸ்வரம் சென்றபொழுது இரண்டு கால்களும் இழந்த மாற்றுத்திறனாளி …. திரும்பி வரும்பொழுது ஏதேனும் கொடுக்கலாம் - அல்ல இவ்வளவு கொடுக்கலாம் என்று முடிவெடுத்திருக்கையில் இடம் காலியாகியிருந்தது அடுத்தமுறை நிச்சயம் அந்த இடத்தில் அவர் இருந்தால் முதல் வேலையாக தாமதிக்காமல் கொடுக்கவேண்டும் எண்ணங்கள் துரத்தியது இரண்டு நாட்களுக்கு பின்னர் படியிறங்குகின்ற இடத்தில் நிச்சயம் ஏதேனும் தரவேண்டும் எண்ணிக்கைப் பார்க்கக் கூடாது தந்தபின் கணக்கு பார்க்கக் கூடாது அதுபோல் அன்று அதேயிடத்தில் கைகளில் சிக்கிய சில்லறைகளை தந்துவிட்டு நடந்து கொண்டிருந்தேன் வந்த வண்டியில் ஏறி வீடு நோக்கி பயணம் இந்த முறை நிச்சயமாய் என் எண்ணங்களில் அந்த மாற்றுத்திறனாளி நிறைந்திருக்கவில்லை இன்னொருமுறை இராமேஸ்வரம் சென்றால் நினைத்து வைத்ததை நிறைவுடன் செய்துவிட வேண்டும்
ஏழு தாளங்கள் தமிழ்த் திரையிசையில் ‘ மிஸ்ர ’ நடைப் பாடல்கள் இசையில் ஐந்து வகைத் தாள நடைகள் உள்ளன . அதில் திரை இசையில் ‘ திஸ்ரம் ’ மற்றும் ‘ சதுஸ்ர ’ நடைகளில் பெரும்பாலான பாடல்கள் அமைக்கப்பட்டாலும் எல்லா இசையமைப்பாளர்களும் மிஸ்ர நடையில் சில பாடல்களாவது அமைக்காமல் வி ட்டதில்லை என்ற அளவிற்கு அவர்களது கவனத்தைப் பெருமளவில் ஈர்க்கும் தாள நடை இந்த வகை ஆகும் . ‘ தகிட தகதிமி ’ என்ற அடிப்படை சொற்கட்டைக் கொண்ட மிஸ்ர நடை மேற்கத்திய சாஸ்திரீய சங்கீதத்தில் செப்டப்புல் என்றும் திரையிசை வட்டாரங்களில் 7 / 8 ரிதம் மீட்டர் என்றும் அழைக்கப்படுகின்றது . மிஸ்ர நடையில் தமிழ்த் திரையிசை உலகில் அன்று தொடங்கி இன்று வரை பல்வேறு இசையமைப்பாளர்கள் மிஸ்ர நடையில் அமைத்துள்ள பாடல்கள் பற்றி பார்ப்போம் . ஜி . ராமநாதனின் ‘ மாசிலா நிலவே ’ பாடலில் ‘ வேணுகானம் தென்றலோடு சேர்ந்த பின்னாலே ’ என்ற பகுதி இந்த நடையில் இருக்கும் . ‘ அருணகிரிநாதர் ’ படத்தில் ஜி . ராமநாதனும் ää டி . ஆர் . பாப்பாவும் இணைந்து ‘ முத்தைத்திரு ’ என்ற திருப்புகழை ...
திருவாரூர் வீதிகளில் பவனி வர தயாராகும் ஆழித்தேர் சி.ராஜசேகரன். திருவாரூர்-மே 8: திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டத்துக்கான தேர்க் கட்டுமானப்பணி 100 டன் மரங்கள், மூன்றரை டன் கயிறுகள் ஆகியவற்றுடன் தயாராகி வருகிறது.  திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் பிரசித்திப் பெற்றது. ஆசியாவிலேயே 2-ஆவது பெரிய தேரான ஆழித் தேரை காண தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தம் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இத் தேரோட்டத்துக்கான கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எண்கோண வடிவில் அமைந்துள்ள திருவாரூர் தேர், 20 பட்டைகளாகக் காணப்படும். அலங்கரிக்கப்பட்ட தேர் 96 அடி உயரத்தையும், 350 டன் எடையையும் உடையது. ஆலங்கரிக்கப்படாத தேரில் 18 அடி உயர கால்களுக்கு பனைமரங்கள் (பனைசப்பை) பயன்படுத்தப்படுகின்றன. பின்னர் மூங்கில்களை பயன்படுத்தி குறுக்கும நெடுக்குமாக கட்டப்படுகின்றன. தேரிலிருந்து 16 அடி வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் வகையில் கட்டப்படுகின்றன. இந்த அமைப்பு தேரின் 4 புறத்திலும் அமைக்கப்படுகிறது. வெளியே நீளும் பகுதி இரண்டு அடுக்குகளாகக் கட்டப்படும். தேர் நான்கு வீதிகளை...

Vairamuthu interview after Rajinikanth's political entry announcement

Below is the full interview details of Thiru.Vairamuthu regarding Thiru.Rajinikanth political entry. வைரமுத்து : திரு . ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறித்து அவரின் நண்பர்களில் ஒருவன் என்கிற முறையில் வரவேற்கிறேன் . ரஜினிகாந்தின் அறிவிப்பிற்கு பிறகு , ஊடகங்களில் சற்றும் இடைவெளியின்றி வாழ்த்துகளும் வசை மொழிகளும் குவிவதை நான் கண்ணுற்றேன் . வாழ்த்துவதற்கோ வசை பாடுவதற்கோ போதுமான அவகாசம் ரஜினிகாந்த் அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லையென்பது என் எண்ணம் . வாழ்த்துகிறவர்களெல்லாம் நாளை வசைபாடலாம் . அதற்காக உங்கள் உடல் நலமும் மனவளமும் செறிந்திருக்க வேண்டும் , செழித்திருக்க வேண்டும் என்று வாழ்த்தினேன் . இப்பொழுது நான் சொல்வதைத்தான் நான் நினைத்தவற்றுள் முக்கியமானது என்று கருதுகிறேன் . ஒரு அரசியலில் ஒருவர் காலெடுத்து வைக்கிறார் . இப்போது ரஜினிகாந்திற்கு மூன்று பிரச்சினைகள் முன்னிற்பதாக நான் கருதுகிறேன் . அவர் ஒரு மிகப்பெரிய கலைஞன் . இன்றைக்கு தலைவனாவதற்கு அவர் தன் வாழ்க்கையை நகர்த்தியிருக்கிறார் . கலைஞ...