சிவபுராணம் பாடல் வரிகள்
நமச்சிவாய வாஅழ்க! நாதன்றாள் வாழ்க! இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் றாள்வாழ்க! கோகழி ஆண்ட குருமணிதன் றாள்வாழ்க! ஆகமம் ஆகிநின் றண்ணிப்பான் றாள்வாழ்க! ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க! வேகங் கெடுத்துஆண்ட வேந்தன்அடி வெல்க பிறப்புஅறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க. ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி சீரார் பெருந்துறைநந் தேவன் அடிபோற்றி ஆராத இன்பம் அருளும்மலை போற்றி. சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால் அவன்அரு ளாலே அவன்றாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பனியான் கண்ணுதலான் றன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந் தெல்லை இலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன். புல்லாகிப் பூடாய்ப் புழவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகி...