ஊடக நெறிமுறை மற்றும் ஊடக தணிக்கை
சமீப காலங்களில் “ பரபரப்பு ” நிகழ்வுகளை ஊடகங்கள் கையாளும் விதம் கவலையுறச் செய்கிறது மற்றும் கண்டனத்தை தெரிவிக்கின்ற வரையறைக்குள் மெல்ல மறைகின்றன . முறையான சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து அல்லது அமைப்பிடமிருந்து தகவல்கள் பெறாமலேயே தவறான செய்திகளை வெளியிடுவது ஒருபுறம் . ஒரு நிகழ்வு இப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது இதற்கு ஒரு முடிவான நிகழ்பு இன்னும் சிறிது நேரத்தில் நிகழ்ந்து விடும் என்கிற மனிதாபிமானத்தை முற்றிலுமாய மழுங்கடிக்கக்கூடிய வகையில் , அந்த நிகழ்வு எப்போது நிகழும் என்றும் அல்லது அந்த நிகழ்வைப் பற்றிய பரவலான கருத்துகளைப் பரப்புவது போன்ற செயல்களில் மறைமுகமாக ஈடுபடுத்தக்கூடிய நேரலைகள் மறுபுறம் . நன்றாக இருப்பவர் எதிர்பாராதவிதமாக உடனடியாக மரணிப்பதும் இயற்கை . உடல்நலம் குன்றி சிகிச்சை பலனளிக்காமல் வீட்டிலோ மருத்துவமனையிலோ தவறிவிடுவதும் இயற்கைதான் . அதிகப்படியான வயது காரணமாக உடல்நிலை படிப்படியாக குறைந்து , தசைகள் சுருங்கி , உடல்உறுப்புகள் ஒவ்வொன்றாய் ஓய்வெடுத்துக் கொண்டு , இறுதியாக மரணமடைவதும் இய...