Posts

Showing posts from August 5, 2018
ஏழு தாளங்கள் தமிழ்த் திரையிசையில் ‘ மிஸ்ர ’ நடைப் பாடல்கள் இசையில் ஐந்து வகைத் தாள நடைகள் உள்ளன . அதில் திரை இசையில் ‘ திஸ்ரம் ’ மற்றும் ‘ சதுஸ்ர ’ நடைகளில் பெரும்பாலான பாடல்கள் அமைக்கப்பட்டாலும் எல்லா இசையமைப்பாளர்களும் மிஸ்ர நடையில் சில பாடல்களாவது அமைக்காமல் வி ட்டதில்லை என்ற அளவிற்கு அவர்களது கவனத்தைப் பெருமளவில் ஈர்க்கும் தாள நடை இந்த வகை ஆகும் . ‘ தகிட தகதிமி ’ என்ற அடிப்படை சொற்கட்டைக் கொண்ட மிஸ்ர நடை மேற்கத்திய சாஸ்திரீய சங்கீதத்தில் செப்டப்புல் என்றும் திரையிசை வட்டாரங்களில் 7 / 8 ரிதம் மீட்டர் என்றும் அழைக்கப்படுகின்றது . மிஸ்ர நடையில் தமிழ்த் திரையிசை உலகில் அன்று தொடங்கி இன்று வரை பல்வேறு இசையமைப்பாளர்கள் மிஸ்ர நடையில் அமைத்துள்ள பாடல்கள் பற்றி பார்ப்போம் . ஜி . ராமநாதனின் ‘ மாசிலா நிலவே ’ பாடலில் ‘ வேணுகானம் தென்றலோடு சேர்ந்த பின்னாலே ’ என்ற பகுதி இந்த நடையில் இருக்கும் . ‘ அருணகிரிநாதர் ’ படத்தில் ஜி . ராமநாதனும் ää டி . ஆர் . பாப்பாவும் இணைந்து ‘ முத்தைத்திரு ’ என்ற திருப்புகழை ...