ஏழு தாளங்கள்

தமிழ்த் திரையிசையில்மிஸ்ரநடைப் பாடல்கள் இசையில் ஐந்து வகைத் தாள நடைகள் உள்ளன. அதில் திரை இசையில்திஸ்ரம்மற்றும்சதுஸ்ரநடைகளில் பெரும்பாலான பாடல்கள் அமைக்கப்பட்டாலும் எல்லா இசையமைப்பாளர்களும் மிஸ்ர நடையில் சில பாடல்களாவது அமைக்காமல் வி ட்டதில்லை என்ற அளவிற்கு அவர்களது கவனத்தைப் பெருமளவில் ஈர்க்கும் தாள நடை இந்த வகை ஆகும்.
தகிட தகதிமிஎன்ற அடிப்படை சொற்கட்டைக் கொண்ட மிஸ்ர நடை மேற்கத்திய சாஸ்திரீய சங்கீதத்தில் செப்டப்புல் என்றும் திரையிசை வட்டாரங்களில் 7/8 ரிதம் மீட்டர் என்றும் அழைக்கப்படுகின்றது. மிஸ்ர நடையில் தமிழ்த் திரையிசை உலகில் அன்று தொடங்கி இன்று வரை பல்வேறு இசையமைப்பாளர்கள் மிஸ்ர நடையில் அமைத்துள்ள பாடல்கள் பற்றி பார்ப்போம்.
ஜி.ராமநாதனின்மாசிலா நிலவேபாடலில்வேணுகானம் தென்றலோடு சேர்ந்த பின்னாலேஎன்ற பகுதி இந்த நடையில் இருக்கும். ‘அருணகிரிநாதர்படத்தில் ஜி.ராமநாதனும்ää டி.ஆர்.பாப்பாவும் இணைந்துமுத்தைத்திருஎன்ற திருப்புகழை அழகான இசைக்கோர்வைகளுடன் தந்தார்கள். ‘பார்த்திபன் கனவுபடத்தில் வேதா, ‘இதய வானில் உதய நிலவேஎன்ற அருமையான படலைக் கொடுத்துள்ளார். ‘தேவதாஸ்படத்தில் சி.ஆர்.சுப்பராமன், ‘உறவும் இல்லை பிரிவும் இல்லைஎன்ற உருக்கமான பாடலைத் தந்தார்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் கர்ணன் படத்தில் மஞ்சள் முகம் நிறம் மாறி என்ற பாடலில் மலர்கள் சூட்டி மஞ்சள் பூசி என்ற பகுதியை இந்த நடையிலும். நூல்வேலி படத்தில் தேரோட்டம் என்ற பாடல முழுமையாக இந்த நடையிலும் லலிதா படத்தில் வசந்தங்கள் வரும் முன்னே என்ற பாடலையும் தந்தார். வி.குமார். எதிர் நீச்சல் படத்தில் சேதி கேட்டோ சேதி கேட்டோ என்ற நகைச்சுவைப் பாடலில் இந்த நடையைப் பிரதானமாக வைத்திருப்பார்.
இசைஞானி இளையராஜா மிஸ்த நடையில் ஏராளமான பாடல்களை பல்வேறு ராகங்களில் படைத்து சாதனை புரிந்துள்ளார்.
1.            செல்லபிள்ளை சரவணன் - பெண் ஜென்மம்
2.            என் கல்யாண வைபோகம் - அழகே உன்னை ஆராதிக்கிறேன்
3.            ஆயிரம் மலர்களேநிறம் மாறாத பூக்கள்
4.            நினைத்தால் இனிக்கும் - கல்யாணராமன்
5.            நதியில் ஆடும் - காதல் ஓவியம்
6.            பொன்வானம் பன்னீர் - இன்று நீ நாளை நான்
7.            காளிதாசன் கண்ணதாசன் - சூரக்கோட்டை சிங்கக்குட்டி
8.            போட்டேனே பூவிலங்குபூவிலங்கு
9.            ஓம் நமஹ - இதயத்தை திருடாதே
10.          கண்ணே நான் அண்ணன் அல்லநான் சிகப்பு மனிதன்
11.          மனசு மயங்கும் - சிப்பிக்குள் முத்து
12.          மீண்டும் மீண்டும் வாவிக்ரம்
13.          கங்கை கரை மன்னனடிவருஷம் 16
14.          பாட்டாலே புத்தி சொன்னார்கரகாட்டக்காரன்
15.          ஆராரோ பாட்டு பாடபொண்டாட்டி தேவை
16.          தென்றல் காற்றே தென்றல் காற்றேகும்பக்கரை தங்கையா
17.          முத்தம்மா முத்து முத்துதந்துவிட்டேன் என்னை
18.          கான கருங்குயிலேபாண்டித்துரை
19.          இளநெஞ்சே வாவண்ண வண்ண பூக்கள்
20.          கண்ணாலே காதல் கவிதைஆத்மா
21.          அன்பே வா அருகிலேகிளி பேச்சு கேட்கவா
22.          கை வீணையைவியட்நாம் காலனி
23.          இசையில் தொடங்குதம்மா - ஹே ராம்
24.          என் ஜீவன் பாடுதுநீதானா அந்தக் குயில்
25.          பொட்டு வைத்த ஒரு - இதயம்
26.          வீணைக்கு வீணைக் குஞ்சுஎல்லாமே என் ராசா தான்
27.          மகிழம் பூவேபுதிய அடிமைகள்
28.          கண்கள் ரெண்டும் சொந்தம் சொல்லஉனக்காகவே வாழ்கிறேன்
29.          மஞ்சள் பூசும் - சர்க்கரை தேவன்
30.          நாள்தோறும் எந்தன் கண்ணில் - தேவதை
31.          காற்றை கொஞ்சம் நிற்க சொன்னேன் - நீ தானே எந்தன் பொன்வசந்தம்
32.          இன்று காதல் மீறுதுமலர்கள் நனைகின்றன

என இன்னும் பல பாடல்கள் கொண்ட மிகப் பெரிய பட்டியல் உண்டு.

அழியாத கோலங்கள் படத்தில் சலீல் சௌத்திரி பூ வண்ணம் போல நெஞ்கம் என்ற காலத்தால் அழியாத பாடல் தந்தார். ஷ்யாம் இசையில் மனிதரில் இத்தனை நிறங்களா படத்தில் பெண்ணே பூமியடி என்ற பாடலும் எஸ்.வி.ரமணன் இசையில் வானில் வாழும் தேவதை என்ற பாடலும் இந்த நடையில் வெளிவந்தன. முரகதமணி அழகன் படத்தல் சாதி மல்லி பூச்சரமே, மழையும் நீயே என்ற இரண்டு பாடல்களையும் டி.இமான் தேசிங்குராஜா படத்தில் அம்மாடி அம்மாடி என்ற பாடலையும் கொடுத்தார்கள். ஜிப்ரான் உத்தம வில்லன் படத்தில் சாகா வரம் போல் சோகம் உண்டோ என்ற பாடலையும், தேவேந்திரன் வேதம் புதிது படத்தில் மந்திரம் சொன்னேன் வந்துவிடு என்ற அழகிய பாடலையும் அமைத்தார்கள். சமீபத்தில் விவேகம் படத்தில் அனிருத் காதலாடா காதாலாடா படலை மிஸ்ர நடையில் கொடுத்தார். வித்யாசாகர் அரசியல் படத்தில் வாராயோ தோழி என்ற பாடலை மிஸ்ர நடையில் அமைத்துள்ளார்.

.ஆர்.ரகுமான் ரட்சகன் படத்தில் கையில் மிதக்கும் காற்றா நீ காதல் தேசம் படத்தில் தென்றலே தென்றலே பவித்ரா படத்தில் அழகு நிலவே போன்ற பாடல்களை மிஸ்ர நடையில் அளித்துள்ளார்.

-டெஸ்லா கணேஷ் (தினமணி-கொண்டாட்டம்-பக்கம் 3-29.07.2018)

Comments

Popular posts from this blog

CyberPsychology & Behavior

Pedestrian crossing and 3.5 seconds or less than 5 seconds.

Govt. hospital uses X-Knife to treat tumour