சமீபத்தில், தொலைக்காட்சிகளில் ஒரு விளம்பரத்தை பார்த்திருப்பீர்கள் . அது, காலணிகளுக்கான விளம்பரம் . அதில் ஒரு பிரபல நடிகர் தோன்றி, ‘ ஒடு ... ஒடு ... ஒடு ... ஒடு, புகழைத்தேடி ஓடு ; பணத்தைத் தேடி ஓடு ; வெற்றியைத் தேடி ஓடு ’ என்பார் . உண்மையிலேயே இன்றைய கால கட்டத்தில் நமது வாழ்க்கை அப்படித்தான் உள்ளது . நகரமயமாதலில் மாதம் 50 , 000 ரூபாய் சம்பாதித்தால்கூட செலவிற்கு அது போதவில்லை . சம்பளத்தில் மூன்றில் ஒருபகுதி வாடகைக்கும்,ஒரு தொகை போக்குவரத்து செலவிற்கும் போய்விடுகிறது . மாதம் 50 , 000 ரூபாய் சம்பாதித்தாலும், நடுத்தர வர்க்கத்தினர் கீழ்த்தட்டு நிலையிலேயே (Lower Middle Class ) இருக்க வேண்டியுள்ளது . இதனால் நாம் கவனிக்காமல் விட்ட விஷயங்கள் என்னென்ன என்று பார்க்க வேண்டும் . இதற்கு முன் நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதையும், இப்போது நாம் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதையும் அந்த விளம்பரத்தை வைத்து தெரிந்துகொள்ளலாம் . . அதில் சொல்வதுபோல் நாம் ஒடிக் கொண்டிருக்கிறோம் ; பணத்தைத் தேடி ஓடிக்கொண்...