அ முதல் அகம் வரை...Part 2
இன்றைய
காலத்தில்
ஒரு
நாள்
பொழுது
குறித்து
சற்று
சிந்திப்போம்.
சென்னை
போன்ற
நகரத்தில்
வாழ்ந்தாலும்
சரி,
அதை
சுற்றியுள்ள
பகுதிகளில்
வாழ்ந்தாலும்
சரி,
தினசரி
வேலைக்கு
செல்வோர்
(இங்கு
அவர்களே
அதிகம்)
காலை
எழுந்திருப்பதே
6 மணிக்கு
மேல்
தான்.
பிறகு
காலைக்
கடன்களை
முடித்து
விட்டு
ஓட்டத்தை
துவக்கினால்
இரவு
9 மணி
வாக்கில்
தான்
இல்லம்
திரும்புகின்றனர்.
இதில்
பயணக்கலைப்பும்
சேர்ந்து
விடும்.
இந்த
ஒரு
பகல்
பொழுதில்
ஒவ்வொருவரும்
அவரவர்
தேவைக்காக
நேரம்
ஒதுக்க
முடிவதில்லை.
இந்நிலையில்
பெரும்பாலும்
காலை
சிற்றுண்டி
தவிர
மதிய
உணவும்,
இரவு
உணவும்
அவரவர்
கையிருப்புக்
கேற்ப
சாலையோரக்
கடைகள் முதல்
உணவகங்கள்
வரை
கிடைக்கும்
உணவை
வாங்கி
உண்ண
வேண்டியுள்ளது.
இதில்
வேறு
என்ன
செய்யமுடியும்?
என்ற
நிலையே
எஞ்சுகிறது.
மேலும்
இன்றைய
சூழலில்
ஆண்,
பெண்
இருவரும்
பணிக்கு
செல்வதால்
வீட்டில்
உணவை
சமைத்து
உண்பதே
அரிதாகி
வருகிறது.
விடுமுறை
தினமான
ஞாயிறன்று
அன்றைய
ஒரு
நாள்
பொழுதை
கணவன்,
மனைவி
மற்றும்
குடும்பத்துடன்
வெளியில்
செல்வது
திரைப்படம்
பார்ப்பது
உணவகங்களில்
உண்பது
என
பொழுதும்
கழிகிறது
பணமும்
கரைகிறது.
இவ்வாறு
வெளியில்
உண்பதாக
இருந்தாலும்
நாம்
எப்படி
உண்கிறோம்,
என்ன
உண்கிறோம்
என்பதே
முக்கியம்.
சொந்த
தொழில்
செய்வோர்
அல்லது
அவர்களிடத்தில்
பணிபுரிவோரில்
வெகு
சிலரை
தவிர
ஏனையோருக்கும்
இதே
நிலைதான்.
இவர்களில்
பெரும்பாலோர்
நேரம்
தவறி
உண்பவர்களே.
இதையும்
தாண்டி ஒரு தனிமனிதனாக
பார்க்கையில் ஒருவரின் செயலை
நான் அறிந்தவரை கூறுகிறேன்.
இதில்
ஒருவரை குறை சொல்வதல்ல நோக்கம்.
ஒவ்வொரு
மனமும் எப்படி செயல்படுகிறது
என்பதும்,
அதைச்
சார்ந்தே அவரின் செயல்கள்
அமைகின்றன என்பதுமே.
உணவு
உண்கிறார் என்றால் முறையில்லாமல்,
அளவில்லாமல்
உண்கிறார்.
அது
செரிப்பதற்காக பல பாணங்களை
அருந்துகிறார்.
வயிறு
நிரம்பி வழியும் வகையில்
உணவு, அது
செரிக்க அதன் மேல் வாயு
நிரப்பப்பட்ட பாணங்கள்.
பிறகு
உடல் திணறுகிறது.
அது
செரித்து முடியும் வரை அவரால்
ஒன்றும் செய்ய இயலாது என்பது
அவருக்கும் தெரியும்.
இதற்கு
பிறகும் பசி எடுக்காவிட்டாலும்
அடுத்த வேளை உணவையும்
விடுவதில்லை.
எனினும்
அவர் இது போன்ற செயல்களை
தொடர்வார்.
இது
ஒருவகை.
மற்றொரு
சாரார் உள்ளனர் அவர்கள்
இன்னொரு வகை.
மதுபானம்
அருந்துவோர்.
உணவுக்கு
முன் மதுபானம் அருந்திவிடுவிடுவர்.
பிறகு
அளவின்றி உணவு கொள்வர்.
கேட்டால்
வயிற்றில் முன்னே சென்ற
மதுபானத்தால் உணவு செரித்து
விடும் என்பர்.
இத்தகையோர்
நம்முள் ஏராளம்.
ஒரு
புறம் மதுவின் தீமைகள் குறித்து
பல விழிப்புணர்வு ஏற்படுத்தப்
பட்டாலும்,
மது
அருந்துவதால் கல்லீரலும்
இருதயமும் பாதிப்படையும்
என்று மருத்துவர்கள் கூறினாலும்
பொருட்படுத்துவதில்லை.
தன்
விருப்ப்ப் படி செயல்படுவதையே
வாழ்க்கை என்றும் கொள்கின்றனர்
இவர்கள் அல்லது இப்பழக்கத்திற்கு
தெரிந்தோ,
தெரியாமலோ
ஆளாகிவிடுகின்றனர்.
இவ்வாறு
உண்டு விட்டு மறுநாள் காலையில்
எழுந்திருக்க முடியாமல்
படுக்கையிலேயே படுத்துக்
கிடப்பர் எழுந்திருக்க மனம்
விரும்பாது,
உடலும்
மேலும் தொடர்ந்து படுத்துக்கிடப்பதை
விரும்பும்.
எனில்
எந்த அளவிற்கு உடல் இல்லை
குடல் மிகுதியாக இயங்கி
சோர்வுற்றிருக்கும் என்பதை
நாம் உணரவேண்டும்.
ஐம்பது
விழுக்காட்டிற்கு மேல்
இளைஞர்கள் நிரம்பிய நாடு,
நம்
நாடு என்று மக்கள் ஜனாதிபதி
எனப் போற்றப்படும் திரு
அப்துல் கலாம் ஐயா அவர்கள்
உரைத்தது அனைவருக்கும்
தெரியும்.
ஆனால்
இன்று தமிழகத்தில் மதுவிற்பனையை
பார்க்கும் பொழுது நெஞ்சம்
பதறுகிறது.
இன்னும்
இருபத்தைந்து அல்லது முப்பது
ஆண்டுகள் சென்றால் நம் நாடு
முதியோர்கள் அதிகம் உள்ள
நாடாக மாறும் அப்பொழுது
இவர்களில் பெரும்பாலானோர்
நோய்களால் அவதியுறுவது திண்ணம்
எனும் பொழுது மனம் வருந்துகிறது.
இவர்கள்
சேர்த்து வைக்கும் செல்வமும்
நோயை குணப்படுத்தாது.
நோய்
வந்து உடல் உறுப்பு பாதிக்கப்பட்ட
பின் என்ன செய்ய முடியும்.
மருந்து
மாத்திரைகளால் மேலும் பராமரித்து
கொள்ள மட்டுமே இயலும்.
நிச்சயமாக
ஆரோக்கியத்திற்காக அவரவர்
தினம் தவறாது மேற்கொள்ளும்
நடவடிக்கைகளே நோய் பாதிப்ப்பிலிருந்து
காக்கும்.
ஏனெனில்
வருமுன் காப்பதே சிறந்ததுவென
நம்முன்னோர்கள் இயம்பியதை
கட்டாயம் நினைவில் கொள்ள
வேண்டியிருக்கிறது.
இவ்வாறு
ஆரோக்கிய பாதிப்பிற்கு
முதன்மையாக உணவையும்,
மனிதர்களிடம்
இருக்கும் சில பழக்க வழக்கங்களையும்
எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
குறிப்பாக
உணவுப் பொருள்களில் ஏற்படுத்தப்படும்
கலப்படம் மிகவும் ஆபத்தானது.
உதாரணமாக
முன்பெல்லாம் அந்தந்த ஊர்களிலே
செக்கு இயந்திரம் கொண்டு
விவசாயிகளிடமிருந்து நேரடியாக்
வேர்கடலை,
எள்
முதலியவற்றை பெற்று கடையில்
செக்கு ஒட்டி எண்ணெய் தயாரித்து
விற்றனர்.
அதில்
கலப்படத்திற்கு வாய்ப்பில்லை.
ஆனால்
இன்று நிலைமையே வேறு.
நிறுவனங்கள்
போட்டி போட்டுக் கொண்டு
எண்ணெய்யை தாயரித்து விற்கின்றன.
சற்று
சிந்தித்தால் ஒரு நிறுவனத்தால்
எப்படி ஒரு மாநிலம் முழுமைக்கும்
எண்ணெய் உற்பத்தி செய்ய
முடியும்.
அதன்
சாத்தியக்கூறுகள் நமக்கு
தெரிவதில்லை.
இது
ஒரு உதாரணம் தான்.
இது
போல் நம் சமூகத்தில் எவ்வளவோ
உள்ளன. ஏன்
இவ்வளவு தூரம் உணவைப்பற்றி
பேசுகிறோம் என்றால் உணவே
இந்த உடலுக்குத் தேவையான
அனைத்து சத்துகளையும்
தரக்கூடியது.உணவே
இந்த உடலை வளர்க்கக் கூடியது.
எனவே
நாம் நம் ஆரோக்கியத்தை
பேணிக்காத்திட வேண்டுமென்றால்
அதற்கானவற்றுள் உணவே முதலிடம்
பெறுகிறது.
சுருங்கச்
சொல்லவேண்டுமானால்
”குடல்
ஆரோக்கியமே உடல் ஆரோக்கியம்”
எனச்
சென்னால் அது உண்மை அன்றி
வேறில்லை.
குடலின்
பலம்,
அதைச்சார்ந்து
அதன் செரிமானத்தன்மை போன்றவற்றை
அறிந்து உண்ண வேண்டும்.
”ஒருவன்
தன் நாற்பது வயதில் வைத்தியனாகிறான்,
இல்லையேல்
அவன் மூடன்”
என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி
உண்டு இது நமக்கு சொல்வது
இதுவே நாற்பது வயதிற்குள்
ஒருவர் தனது உடல் எந்த உணவை
ஒத்து கொள்ளும் எந்த உணவை
ஒத்துக் கொள்ளாது என அறிந்திருக்க
வேண்டும் இல்லையேல் அவர்
மூடராவார்.
எனவே
எதை உண்டால் உடலுக்கு நல்லது,
எதை
உண்ணக்கூடாது,
அளவோடு
உண்ண வேண்டும்,
அடுத்த
வேளைக்கு பசி எடுக்கும்
வகையில் உண்ண வேண்டும்,
நேரத்திற்கு
உண்ண வேண்டும்,
முந்தைய
வேளையில் என்ன உண்டோம் அது
உடலில் என்ன செய்துள்ளது
என்பன போன்றவற்றை எல்லாம்
அறிந்து உண்ண வேண்டும்.
இதையே
நமது திருவள்ளுவரும்
குறிப்பிடுகிறார்
”மருந்தென
வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது
போற்றி உணின்”
முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை என்பதே இதன் பொருள் எனின் இக்குறள் குடலின் பணியின் இன்றியமையாமையையும், ஏற்கனவே உண்ட உணவின் மூலம உடல் அடையும் நலத்தையும் கணக்கில் கொண்டு அடுத்த வேளை உணவை உண்ணச் சொல்கிறது.
அடுத்த
இதழில் சந்த்திப்போம்
கேஎஸ்பி
ஹரிவிஷ் வர்ஷன்
Harvish Varshan KSP.
About the writer:
Being a chemistry graduate, Harvish Varshan KSP, pursued his interest in the field of Siddha. And his continuous research in siddha enabled him to serve the society with his expertise and experience with his in-depth knowledge about the health. Though in later phase of life, he juggled with his job of database administrator, traning the trainers, he didnt let off his interest in the Siddha. Through his sustained interest, he is now publishing his thoughts of current lifestyle in the newly formed and published adhaan magazine, a monthly publication.
ச்
Comments