அ முதல் அகம் வரை...Part 3
நாம் எப்படி தினசரி பல் துலக்குகிறோமோ , எப்படி தினமும் நீராடுகிறோமோ அது போல் குடலை சுத்தமாகவும் , ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது என்பதை ஆரோக்கியத்தின் முதற்படியாகக் கொள்ளலாம் . ஒரு பயணத்திற்கு எப்படி வாகனம் முக்கியமாகிறதோ அது போல் தேக ஆரோக்கியத்திற்கு குடலின் ஆரோக்கியமும் திறனும் முக்கியமாகிறது . நாளைக்கு இருமுறை , வாரத்திற்கு இருமுறை , மாதத்திற்கு இருமுறை , வருடத்திற்கு இருமுறை என சித்தர் பெருமக்கள் உரைத்திருக்கிறார்கள் இவை அனைத்துமே நமது தேக ஆரோக்கியத்தை காப்பதற்கான விதி முறைகளாகும் . இதில் முதலில் வருடத்திற்கு இருமுறை என்பதை ப் பற்றி பார்ப்போம் . நாம் பிறந்ததிலிருந்து தொடர்ந்து இடைவெளி இல்லாமல் அல்லது ஒய்வு தராமல் உணவு எடுத்துக் கொண் டே இரு க்கிறோம் . உணவு என்பதில் நொறுக்குத் தீனியையும் கணக்கில் சேர்த்தே சொல்கிறேன் . இதனால் குடலுக்கு ஒய்வு இல்லாமல் போவதோடு குடலும் எப்பொழுது நிறைந்தே இருக்கிறது . இதனால் இரப்பை , குடல் மற்றும் பெருங்குடலில் தேவையற்ற கழிவுகளின் தேக்கம் ஏற்பட்டிருக்கும் . எனவே இவற்றை சுத்தம் செய்யும் பொருட்டு குறைந்தபட்சமாக வருடத்திற்கு இரண்டு முறையாவது பேதி...