திருவாரூர் வீதிகளில் பவனி வர தயாராகும் ஆழித்தேர் சி.ராஜசேகரன். திருவாரூர்-மே 8: திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டத்துக்கான தேர்க் கட்டுமானப்பணி 100 டன் மரங்கள், மூன்றரை டன் கயிறுகள் ஆகியவற்றுடன் தயாராகி வருகிறது. திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் பிரசித்திப் பெற்றது. ஆசியாவிலேயே 2-ஆவது பெரிய தேரான ஆழித் தேரை காண தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தம் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இத் தேரோட்டத்துக்கான கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எண்கோண வடிவில் அமைந்துள்ள திருவாரூர் தேர், 20 பட்டைகளாகக் காணப்படும். அலங்கரிக்கப்பட்ட தேர் 96 அடி உயரத்தையும், 350 டன் எடையையும் உடையது. ஆலங்கரிக்கப்படாத தேரில் 18 அடி உயர கால்களுக்கு பனைமரங்கள் (பனைசப்பை) பயன்படுத்தப்படுகின்றன. பின்னர் மூங்கில்களை பயன்படுத்தி குறுக்கும நெடுக்குமாக கட்டப்படுகின்றன. தேரிலிருந்து 16 அடி வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் வகையில் கட்டப்படுகின்றன. இந்த அமைப்பு தேரின் 4 புறத்திலும் அமைக்கப்படுகிறது. வெளியே நீளும் பகுதி இரண்டு அடுக்குகளாகக் கட்டப்படும். தேர் நான்கு வீதிகளை...
Posts
Showing posts from July 15, 2018