திருவாரூர் வீதிகளில் பவனி வர தயாராகும் ஆழித்தேர்
சி.ராஜசேகரன்.
திருவாரூர்-மே 8: திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டத்துக்கான தேர்க் கட்டுமானப்பணி 100 டன் மரங்கள், மூன்றரை டன் கயிறுகள் ஆகியவற்றுடன் தயாராகி வருகிறது.
திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் பிரசித்திப் பெற்றது. ஆசியாவிலேயே 2-ஆவது பெரிய தேரான ஆழித் தேரை காண தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தம் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இத் தேரோட்டத்துக்கான கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எண்கோண வடிவில் அமைந்துள்ள திருவாரூர் தேர், 20 பட்டைகளாகக் காணப்படும். அலங்கரிக்கப்பட்ட தேர் 96 அடி உயரத்தையும், 350 டன் எடையையும் உடையது. ஆலங்கரிக்கப்படாத தேரில் 18 அடி உயர கால்களுக்கு பனைமரங்கள் (பனைசப்பை) பயன்படுத்தப்படுகின்றன. பின்னர் மூங்கில்களை பயன்படுத்தி குறுக்கும நெடுக்குமாக கட்டப்படுகின்றன. தேரிலிருந்து 16 அடி வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் வகையில் கட்டப்படுகின்றன. இந்த அமைப்பு தேரின் 4 புறத்திலும் அமைக்கப்படுகிறது.
வெளியே நீளும் பகுதி இரண்டு அடுக்குகளாகக் கட்டப்படும். தேர் நான்கு வீதிகளை சுற்றி வரும்போது,மேற்கு கோபுர வாசலில் சுமார் 10 அடி வரை குறுகலாக காணப்படும். அந்த இடத்தில் நீளும் பகுதி இடிபடக்கூடும். எனவே, நீளும் பகுதியை உள்இழுத்து பின்னர் வெளியே தள்ளும் வகையில் அமைக்கப்படுவது இதன் சிறப்பம்சம். இந்த நீளும் பகுதி பேச்சு வழக்கில் கானட்டு,விசிறினம் என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் தேரின் அகலத்துடன் நீளும் பகுதியும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆந்த வகையில் தேரின் அகலம் நிகழாண்டில் 62 அடி எனலாம். சில நேரங்களில் மூங்கில் நீட்டப்படுவதை பொருத்து வுடலாம் அல்லது குறையலாம். புpன்னர் விமானம் பகுதி கட்டப்படுகிறது. அடுத்து கலசப்பகுதி(கலசங்குச்சி) ஆகியவை கட்டப்படுகின்றன.
தேர்த் திருவிழாவின்போது,தேர் சென்று கொண்டிருக்கையில் அலங்காரக் கட்டுமானஙகள் சரிந்து விடாமல் அல்லது நகர்ந்து விடாமல் இருக்க 1 பக்கத்துக்கு 6 வீதம் 4 பக்கத்துக்கும் 24 கலச மரங்கள் சவுக்குகளால் அமைக்கப்படுகின்றன. தேரின் 5-ஆவது நிலை வரை பற்றுமாறு இவைகள் கட்டப்படுகின்றன. இத்தேர்க் கட்டுமானத்துக்கு 69 டன் மூங்கில்கள் என சுமார் 100 டன் மரங்கள் 5 தேர் செய்வதற்கும் பய்னபடுத்தப்படுகின்றன. இவைகளுக்கு சுமார் ஒன்றரை டன் கயிறு பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் அதன் ஸ்திரத் தன்மையை பாதுகாக்கும் வகையில் குதியல் கயிறு செய்ய 2 டன் கயிறு பயன்படுத்தப்படுகிறது. தேர் நகர்ந்து செல்லும்போது,தேரின் வேகத்தை கட்டுப்படுத்தவும்,தேர் நேராக செல்லவும் முட்டுக்கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. சுமார் 550 முட்டுக கட்டைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முட்டுக் கட்டைகள் தயார் செய்ய புளிய மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தேர் செல்கையில், முட்டுக் கட்டைகளை பயன்படுத்தும் போதுää தேரின் எடை தாங்காமல் இதர மரங்கள் தெரிக்கக்கூடும் அல்லது உடையக்கூடும். ஆனால் புளியமரமானது, தெரிக்காமல் சீராக கொண்டு செல்ல உதவுகிறது. ஏறக்குறைய வாகனங்களின் ஸ்டியரிங் பணியை செய்பவை இந்த முட்டுக் கட்டைகளே. இதேபோல் கட்டுமானப் பணிகளில் கயிறுகளை கட்டும் போது, அவை மீண்டும் அவிழ்ந்து விடாமல் இருக்க மூங்கில் குச்சி எனப்படுகின்றன. சுமார் 700 மெழுகு குச்சிகள் கட்டுமானங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. குதியல் கயிறு பய்னபடுத்தும் இடங்களில் ஆப்பு பய்னபடுத்ப்படுகிறது. சுமார் 400 ஆப்புகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
பொதுவாக தேர்க்கட்டுமானப் பணிகள் ஒரு வாரத்துக்கு உள்ளாகவே இதர இடங்களில் முடிவடைந்து விடும். ஆனால் ஆழித்தேரை முடிக்க ஒரு மாத காலமாகும். தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் பணிகள் மே 20-ஆம் தேதி வாக்கில் முடிவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்திருவிழாவுக்கென சுமார் 500 பணியாளர்கள் தயாராக உள்ளனர். குட்டுமானப் பணிகளிலும், தேர் கிளம்பிச் சென்று நிலையை அடையும் வரையிலும் இவர்களின் பணி இருக்கும். மே 27-ஆம் தேதி நடைபெற உள்ள ஆழித் தேரோட்ட விழா பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கோயில் நிர்வாகத்தினரும், கட்டுமானப் பணியாளர்களும் மும்முரமாக தங்களது பணிகளை செய்து வருகின்றனர்.
தேர்த் திருவிழாகை எதிர்நோக்கி திருவாரூர் ம்டுமன்றி பல்வேறு இடங்களில் உள்ள பக்தர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், அழகிய வேலைப்பாடுகளுடன், உறுதியான கட்டுமானங்களுடன், உறுதியான கட்டுமானங்களுடன், மே 27-இல் திருவாரூர் நகர வீதிகளில் ஆடி, அசைந்து, பவனி வர தயாராகி வருகிறது ஆழித்தேர்.
Source: The above article was taken from Dinamani chennai edition May 8,2018
Comments