Posts

Showing posts from December 31, 2017

Vairamuthu interview after Rajinikanth's political entry announcement

Below is the full interview details of Thiru.Vairamuthu regarding Thiru.Rajinikanth political entry. வைரமுத்து : திரு . ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறித்து அவரின் நண்பர்களில் ஒருவன் என்கிற முறையில் வரவேற்கிறேன் . ரஜினிகாந்தின் அறிவிப்பிற்கு பிறகு , ஊடகங்களில் சற்றும் இடைவெளியின்றி வாழ்த்துகளும் வசை மொழிகளும் குவிவதை நான் கண்ணுற்றேன் . வாழ்த்துவதற்கோ வசை பாடுவதற்கோ போதுமான அவகாசம் ரஜினிகாந்த் அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லையென்பது என் எண்ணம் . வாழ்த்துகிறவர்களெல்லாம் நாளை வசைபாடலாம் . அதற்காக உங்கள் உடல் நலமும் மனவளமும் செறிந்திருக்க வேண்டும் , செழித்திருக்க வேண்டும் என்று வாழ்த்தினேன் . இப்பொழுது நான் சொல்வதைத்தான் நான் நினைத்தவற்றுள் முக்கியமானது என்று கருதுகிறேன் . ஒரு அரசியலில் ஒருவர் காலெடுத்து வைக்கிறார் . இப்போது ரஜினிகாந்திற்கு மூன்று பிரச்சினைகள் முன்னிற்பதாக நான் கருதுகிறேன் . அவர் ஒரு மிகப்பெரிய கலைஞன் . இன்றைக்கு தலைவனாவதற்கு அவர் தன் வாழ்க்கையை நகர்த்தியிருக்கிறார் . கலைஞ...