Vairamuthu interview after Rajinikanth's political entry announcement
Below is the full interview details of Thiru.Vairamuthu regarding Thiru.Rajinikanth political entry.
வைரமுத்து:
திரு. ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறித்து அவரின் நண்பர்களில் ஒருவன்
என்கிற முறையில் வரவேற்கிறேன். ரஜினிகாந்தின் அறிவிப்பிற்கு பிறகு, ஊடகங்களில் சற்றும்
இடைவெளியின்றி வாழ்த்துகளும் வசை மொழிகளும் குவிவதை
நான் கண்ணுற்றேன். வாழ்த்துவதற்கோ வசை பாடுவதற்கோ போதுமான
அவகாசம் ரஜினிகாந்த் அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லையென்பது என் எண்ணம். வாழ்த்துகிறவர்களெல்லாம்
நாளை வசைபாடலாம். அதற்காக உங்கள் உடல் நலமும்
மனவளமும் செறிந்திருக்க வேண்டும், செழித்திருக்க வேண்டும் என்று வாழ்த்தினேன். இப்பொழுது
நான் சொல்வதைத்தான் நான் நினைத்தவற்றுள் முக்கியமானது
என்று கருதுகிறேன். ஒரு அரசியலில் ஒருவர்
காலெடுத்து வைக்கிறார். இப்போது ரஜினிகாந்திற்கு மூன்று பிரச்சினைகள் முன்னிற்பதாக
நான் கருதுகிறேன். அவர் ஒரு மிகப்பெரிய
கலைஞன். இன்றைக்கு தலைவனாவதற்கு அவர் தன் வாழ்க்கையை
நகர்த்தியிருக்கிறார். கலைஞன் - தலைவன். இந்த இரண்டிற்குமான இடைவெளி
என்பது பிற மாநிலங்களில் மிக
மிக மிக அதிகம். தமிழ்நாட்டில்
சில பேருக்கு இந்த இடைவெளி மிக
குறைவு. அதற்கு முன்னுதாரணங்கள் உண்டு.
ரஜினிகாந்த் அவர்களுக்கு இந்தக் கலைஞன் என்பதற்கும்
தலைவன் என்பதற்குமான இடைவெளி என்பது குறுகியதா? நீண்டதா?
என்பதை காலம் சொல்லும். முதலில்,
அரசியலில் வருவதற்கு ஒரு மனிதன் மூன்று
விதமான செய்திகளை தெளிவாக முடிவு செய்துகொள்ள வேண்டும்.
என் எதிரி யார்? இதுதான்
இன்றைக்கு அரசியலில் காலெடுத்து வைப்பவர்களுக்கு முன்னால் இருக்கும் முதற்பெருங்கேள்வி, என் எதிரி என்பவன்
யார்? நண்பன் யாரென்பதை அப்புறம்
கூட முடிவு செய்து கொள்ளலாம்.
முதலில் என் எதிரி யார்?
எந்தக் கருத்தை எதிர்த்து அல்லது யாரை எதிர்த்து
நான் இந்தக் களத்திற்கு வருகிறேன்
என்பது மிகப்பெரியக் கேள்வி. இரண்டாவது கேள்வி, மற்றவர்கள் யாரும் சாதிக்கத் தவறியதை,
மற்ற அரசியல் களத்து தலைவர்கள் யாரும்
சாதிக்க முடியாததை, நான் எப்படி சாதித்துக்
காட்டுவேன் என்பதற்கான கொள்கை விளக்கம். அந்தக்
கொள்கை விளக்கம் என்பது, திட்டவட்டமாகத் தெளிவாகத் தீர்மானித்து இந்தத் தமிழ்நாட்டு மக்களுக்கு
அவர் அறிவிப்புச் செய்ய வேண்டும் சொல்லப்போனால்
இந்தத் தலைவன் என்பதற்கும், கலைஞன்
என்பதற்குமான இடைவெளியை அந்தக் கொள்கைதான் இட்டு
நிரப்பும் என்று நான் நம்புகிறேன்.
மூன்றாவது, இந்தக் கொள்கை என்று
ஒன்று அறிவிக்கப்பட்டால் அதை கொண்டு செலுத்துவதற்கு
அடைவதற்கு சிறந்த சிந்தனையாளர்களும் சிறந்த
செயல் வீரர்களும் ஒரு இயக்கத்திற்கு ஒரு
தலைவனுக்கு தேவை. இந்த மூன்றும்
ரஜினிகாந்த் அவர்களுக்கு முன்னிற்கிற மிகப்பெரிய சவால்கள். இந்த சவால்கள் குறித்து
அவர் அறிவிப்பதற்கு ஒரு கால அவகாசம்
கேட்டிருக்கிறார். அந்தக் கால அவகாசத்தை
அரசியல்வெளி அவருக்கு வழங்கியே தீர வேண்டும். ஆட்சிக்கு
வந்தவர்களுக்கு தேன்நிலவு மாதம் என்று ஒன்று
தருகிறார்கள். அரசியல் அறிவிப்பைச் செய்வதற்கும் ஒரு குறிப்பிட்ட கால
அவகாசம் வேண்டியிருக்கிறதென்று நான் நினைக்கிறேன். ஆந்த
எதிரி யாரென்பது, என் கொள்கை எதுயென்பது,
இதையெப்படி நிறைவேற்றப் போகிறேன், என்னைச் சார்ந்திருக்கும் அரசியல் அறிவுஜிவிகள், என்னைச் சார்ந்திருக்கும் துறைசார்ந்த அறிவுஜிவிகள், அதை நிறைவேற்றப் போகிற
செயல்வீரர்கள், யார் என்பதைப் பொருத்துத்தான்,
அவர் அரசியலைப் பற்றி வாழ்த்துச் சொல்லவோ?
வுசை சொல்லவோ இயலுமென்று நான் நினைக்கிறேன். இப்போதைக்கு
அவர் அறிவிப்பை நான் என் நண்பன்
என்ற முறையில் வரவேற்கிறேன். குhரணம், இந்தியாவில்
வாக்களிக்கும் உரிமைப் பெற்ற ஒவ்வொரு குடிமகனுக்கும்,
ஐனாதிபதியாகவும் உரிமையுண்டு, அரசியல் கட்சி தொடங்கவும் உரிமையுண்டு.
கேள்வி:
ரஜினிகாந்த் வெற்றியடைவார் என்ற நம்பிக்கை உங்களுக்கிருக்கிறதா?
வைரமுத்து:
அவருக்கே ஒரு கால அவகாசம்
வேண்டுமென்கிறபோது. இந்தக் கேள்விக்கு எனக்கு
அதைவிட அதிக அவகாசம் தேவைப்படுகிறது.
கேள்வி:
இது காலம் கடந்து எடுத்த
முடிவு என்று நினைக்கிறீர்களா?
வைரமுத்து:
பொதுமக்களில் பலர் அப்படி நினைக்கிறார்கள்.
ரஜினிகாந்தைப் பொருத்த அளவில், இதுதான் என் காலம் என்று
நினைக்கலாம். அதைத் தடுப்பதற்கோ, மறுப்பதற்கோ
நாம் யார்?
கேள்வி:
மறைந்த முதலமைச்சர் nஐயலலிதாவிற்குப் பிறகு இதுபோன்ற கமலஹசன்
ஆகட்டும், நடிகர் ரஜினிகாந்த் ஆகட்டும்
இதுபோல் பலர் வந்து இந்த
அரசியல் கட்சி தொடங்குறேன் என்பதை
நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
வைரமுத்து:
அவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்தைச் சொல்வதற்கு ஒரு கால அவகாசம்
தேவைப்படுகிறதென்று அவர்களாகவே கருதுகிறார்கள். அந்தக் கருத்துக்கு ஏற்ற
காலம் இதுதான் என்று அவர்கள் கருதக்கூடும்.
கேள்வி:
கடந்த ஐம்பது ஆண்டுகளாக திராவிடக்
கட்சிகள் இங்க இருக்கக்கூடிய, செயல்பட்டுக்கொண்டிருக்கிற தமிழ்நாட்டில்
இப்ப ஆன்மீகத்துல புதுசா ஒரு விஷயத்தை
கொண்டு வருகிறார் ரஜினிகாந்த். இதை எப்படிப் பார்க்கறீங்க.
கடந்த சில ஆண்டுகளாக…..இது
வந்து சமூக வலைத்தளங்கள்ல எப்படி
விமர்சிக்கப்படுதுன்னா மதரீதியான அரசியலுக்கு அவர் வேரூன்றுகிறார் அப்படிங்கற
ஒரு விஷயத்தை வச்சி பதிவு செய்றாங்க…
வைரமுத்து:
இது ஒரு முக்கியமான விவாதமாக
சென்று கொண்டிருக்கிறது என்பதை நானும் ஓரளவிற்கு
அறிகிறேன். இதற்கு ஒரு முக்கியமான…..நான் ரஜினிகாந்த் அவர்களை
வந்து …அவருக்கு பின்புலமாக இருந்து தாங்க வேண்டுமென்பதற்காக இந்தப்
பதிலைச் சொல்லவில்லை. ஒரு கருத்தைச் சொல்ல
வேண்டுமென்று விரும்புகிறேன். ஆன்மீகம் வேறு மதவாதம் வேறு
என்பது நம்மில் பலபேருக்கு தெரியாதா? மதவாதம் என்பது எந்த வகையிலும்
மறுக்கப்பட வேண்டியது. எந்த வகையிலும் ஏற்றுக்
கொள்ளத்தக்கதல்ல. மதவாதம் என்ற ஒரு அடிப்படைத்
தத்துவத்தின் மூலமாக மக்கள் பிளவுப்படுத்தப்படுவதோ,
ஒரு சாரார் உரிமைப் பெறுவதோ,
ஒரு சாரார் உரிமை பறிக்கப்படுவதோ
நாம் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. ஆன்மீகம் என்று ரஜினிகாந்த் எதைக்
கருதிகிறார் என்பதை நான் இனிமேல்தான்
அவரிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ள வேண்டும். ஆன்மீகம்
என்பது இரண்டு. ஒன்று கடவுள் சார்ந்ததா?
ஒழுக்கம் சார்ந்ததா? அவர் ஆன்மீகம் என்று
கருதுவது எதை? அவர் கருதுவதாகக்
கருதுகிற ஆன்மீகம் சிறந்ததாக இருக்கலாமோ என்று சிலர் கருதுகிறார்கள்.
எனவே மதவாதம் வேறு ஆன்மீகம் வேறு.
ரஜினிகாந்த் கருதுகிற ஆன்மீகம் என்பது யாது? என்பதை
அறிந்துக் கொள்ள சற்றே பொறுத்திருக்க
வேண்டியிருக்கிறது.
கேள்வி:
ரஜினிகாந்துக்கு கால அவகாசம் கொடுக்க
வேண்டுமென்று சொல்றீங்க, கடந்த சில ஆண்டுகளாகவே
அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்ற அவர் ரசிகர்களும்
பொதுமக்களும் நிறைய பேர் கேட்டுக்கொண்டிருக்காங்க.
இந்தக் கால அவகாசம் போதலை
என்று நீங்க நினைக்கிறீங்களா?
வைரமுத்து:
இல்லை. இப்பொழுது அவர் கருதுவது. அவர்
ஆன்மீகப்படி…நான்…ஒருமுறை சொல்லியிருக்கிறார்.
அதை இப்போ சொல்றேன் உங்களுக்கு.
அரசியலுக்கு வருவதாக இருந்தால்…என் தேவை..அரசியலுக்கு
தேவைப்படுகின்ற காலம் எது என்று
கருதப்படுகிறதோ..அந்தக் காலத்தில்தான் வரவேண்டியிருக்கும்.
இப்போது அரசியலுக்கு வரக்கூடிய வெளி..இடைவெளி இப்போதுதான்
கனிந்திருப்பதாக அவர் கருதுகிறார். ஆதை
அவரிடம்தான் கேட்க வேண்டும்.
கேள்வி:
நீங்க வந்து அவர் நண்பர்.
ஆந்த விதத்துல ஆன்மீகத்துல ரொம்ப தெளிவு பெற்றவர்,
ஆன்மீகவாதியாவாதியா வந்து பல இடத்துல
அடையாளப்படுத்தியவர் அவர்..அப்படிங்கற விதத்துல...
அவர் இந்த ஆன்மீகம் என்று
சொல்றதுல…உங்களுக்கு ஏதாவது புரிதல் இருக்கா?
வைரமுத்து:
இல்லை…என்னுடைய….அவருக்கும்…எனக்குமான… ஆன்மீகத் தொடர்பு என்பது மிகக் குறைவு
அவர் கருதுகிற ஆன்மீகத்தைப் பற்றியோ, நான் கருதுகிற நாத்திகத்தைப்
பற்றியோ, இரண்டு பேரும் விவாதித்துக்
கொள்வதில்லை. இரண்டுபேருக்குமான ஒரு பொது இடமிருக்கிறது..சமூக மேன்மையென்பது…தனி
மனித ஒழுக்கமென்பது…அந்தப் புள்ளியில் நாங்கள்
பேசிக்கொள்வோம். அவரிடம் பேசிக்கொண்டிருக்கிற பொழுது…..ஓ…இந்தச் சிந்தனை
நாத்திகவாதத்திலிருந்த பேசுகிறீர்கள்…இதுவும் ஆன்மீகம் போல் இருக்கிறதே..நான்
படித்த ஆன்மீகத்திற்கு ஒத்துப் போகிறதே…என்று அவரிடம் அவர்….என்னிடம் சில நேரங்களில் சிலாகித்தது
உண்டு. அந்த…..நம் நாட்டில்
ஆன்மீகமென்பது உணருகிற சக்தியைப் பொருத்தது. ஒவ்வொருவனின் ஆன்மீகமும் வெவ்வேறாக இருக்கிறது.
ரஜினியின் ஆன்மீகம்…அவர் புரிந்து கொண்ட
ஆன்மீகம் எது என்பதை இனிமேல்
அரசியல்வெளியில் அவர் விவரமாகச் சொல்லுவார்
என்று எதிர்ப்பார்க்கிறேன்.
கேள்வி:
திமுக அதிமுகவிற்கு போன்ற கட்சிகளுக்கு சவாலாக
இருக்குமென்று நினைக்கிறீர்களா?
வைரமுத்து:
இன்றுதானே அறிவிப்பே வெளியிட்டிருக்கிறார்…..பார்ப்போம்.
கேள்வி:
தமிழக மக்களுடைய பிரச்சினைகளுக்கு எந்த முன்னுரிமையோ, குரலோ
கொடுக்காம..எல்லா பிரச்சினைன்னு சொல்லல…பொதுவா முக்கியமான பிரச்சினைகளுக்கு
கொடுக்காம…தனக்கிருக்கக்கூடிய ஒரு இமேஜை மட்டும் வைச்சுக்கிட்டு ரஜினியும் கமலும் இதுபோன்று அரசியலுக்கு
வருவது நியாயமான அணுகுமுறை என்று நினைக்கிறீர்களா?
வைரமுத்து:
நியாயமா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டியவர்கள்
மக்கள். நம்பிக்கை இவர்கள்மீது இருந்தால், மக்கள் ஆதரிப்பார்கள். அல்லது
இவர்கள் தங்களை நம்பச் செய்தால்
மக்கள் ஆதரிப்பார்கள். நம்ப வைக்கிறார்களா, நம்புகிறார்களா
என்பதை களம்தான் தீர்மானிக்கும். நீங்களும் நானுமல்ல.
கேள்வி:
கவிஞரா இதுவரைக்கும நீங்க வந்து அவரை
பார்த்திருக்கீங்க..இப்போ வந்து அரசியல்வாதியா
பார்க்கப் போறீங்க. நீங்க எப்படி பார்க்கப்
போறீங்க...நீங்க ஒரு பாதையில
இருக்கீங்க, அவரோட பாதை வேறாக
இருக்கிறது…உங்களுடைய அடுத்த கட்டம்..இப்போ
எப்படி பார்க்கப் போறீங்க..உங்க அணுகுமுறை என்ன?
வைரமுத்து:
என்றைக்குமே அவருக்கும் எனக்குமுள்ள அணுகுமுறை நண்பன் என்ற அடிப்படையில்தான்.
எந்தக் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும் நட்பு ஒன்றாக இருக்கும்.
ஆண் வேறு பெண் வேறு
என்றாலும் தாம்பத்தியத்தில் ஒன்றாக இருப்பதில்லையா?
கேள்வி:
எம்ஜியாரோட கருத்துகளா கண்ணதாசனோட பாடல்கள் வந்திருக்கு அதேபோன்று ரஜினியோட பல படங்களுக்கு உங்களோட
கருத்துகள் வந்து சமூகம் சார்ந்த
விஷயங்களா பேசிச்சு. இந்த நிலைப்பாட்டுல ரஜினி
உறுதியா இருப்பாரா, அதில் உங்களோட கருத்து
என்ன?
வைரமுத்து:
கலைக்கும் களத்துக்குமான வேறுபாட்டை உங்கள் கேள்வி முன்வைப்பதாக
நான் நினைக்கிறேன். என் ஒரு துளி
வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு
கொடுத்தது தமிழல்லவா. என் உடல் பொருள்
ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா? என்று ஒரு பாட்டில்
நான் எழுதியருக்கிறேன். அது அந்த கதாநாயகனுக்காக
எழுதப்பட்டப் பாட்டு…ரஜினிக்காக அல்ல
அந்தப் பாட்டு ஒரு கதையின்
தலைவன் சொல்கிற கருத்து. அப்போது அவர் அரசியல்வாதி அல்ல.
கதையின் தலைவன் ஒரு கலையில்
சொல்வதை, அரசியல் தலைவன் ஒரு களத்தில்
சொல்வதாக நீங்கள் கருதிக்கொண்டால் அதற்கு அவரும் உடன்பட்டால்..அவர் அப்படி வாழ்ந்தால்
நல்லதுதானே!
கேள்வி:
சார் அந்தப் பாட்டில் இருக்கிற
குணாதிசயம் மாதிரி ரஜினிகாந்த் இருப்பாருன்னு
நீங்க நினைக்கிறீங்களா?
வைரமுத்து:
இல்லை…அவர் இருப்பார் என்று
நான் நினைக்கிறேன்.
கேள்வி:
ரஜினிகாந்த் வந்து அரசியல் சிஸ்டம்
சரியில்லை என்று சொல்றத பற்றி
உங்க கருத்து என்ன?
வைரமுத்து:
அரசியல் சிஸ்டம்…இந்தியாவில் ஜனநாயகமே சரியில்லையே?...இந்த அரசியல் அமைப்பு..அல்லது இந்த அரசியல்
எந்திரம்…அவர் சிஸ்டம் என்று
கருதுவதை அரசியல் எந்திரம்; என்று மொழிபெயர்த்துக் கொள்ளலாம்.
இந்த அரசு எந்திரமா ….அரசியல்
எந்திரமா…இரண்டையும் நாம் வேறுபட்டு பார்க்க
வேண்டும். அரசு எந்திரம் வேறு….அரசியல் எந்திரம் வேறு என்று இரண்டு
பிரிவுகளாக இருக்கின்றன. இந்த அரசியல் எந்திரம்
சரியில்லை என்றால். என்ன பொருள் என்றால்
சட்டத்தின்படி ஒரு ஆட்சி இந்தியாவில்
தமிழகத்தில் நடைபெறுகிறதா என்ற கேள்வியை அவர்
முன் வைக்கிறார். இது எல்லாக் காலத்திலும்
எழுப்பப்படுகிற கேள்விதான். இது வெள்ளைக்காரன் காலத்திலிருந்து,
காங்கிரஸ் காலத்திலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டது
அண்ணா திமுகவுக்கும் எழுப்பப்பட்டது அரசை விமர்சிக்கிறவர்கள் வைக்கின்ற
முதல் வாசகம்…இந்த சிஸ்டம் கெட்டுப்போய் விட்டது
என்பதுதான். அதை ரஜினிகாந்தும் முன்வைக்கிறார்.
அவர் எங்கு எது கெட்டிருக்கிறது
என்பதையும் அதை எப்படி சீர்
செய்வது என்பதையும் அவர் கருதிப் பார்ப்பார்
என்பதையும் நாம் கருதலாம்.
கேள்வி:
இவ்வளவு நாளா திரைப்பட நடிகரா
இருந்த ரஜினி தற்போது ஒரு
தலைவராகிறாரு, இப்படி தலைவராகிறதை, மக்கள்….தமிழக மக்கள் எப்படி
பார்க்கிறாங்க…ஒரு தமிழனா நீங்க
எப்படி பார்க்கிறீஙக? (இந்தக் கேள்வியின் கடைசி
வார்த்தைகளின் ஒலி சரியாக கேட்கப்படவில்லை…)
வைரமுத்து:
இந்தக் கேள்வி ஒரு நுட்பமான
கேள்வி..நான் இந்தக் கேள்விக்கு
பதிலைச் சொன்னால்…இந்திய இறையாண்மைக்கே எதிராகி
விடும்…அதனால்…நான் இந்தக்
கேள்வியைத் தவிர்த்துத் தள்ளிப் போக விரும்புகின்றேன்..ஏனென்றால்
இதுவரைக்கும் நான் சொன்னதெல்லாம் உண்மை.
இப்போது நீங்கள் கேட்ட கேள்விக்கு நான்
உண்மைக்குப் பின்னால் பதுங்கி நின்று சொல்லவேண்டியிருக்கும். அல்லது இத்தனை
பெரிய ஊடகத்தின் முன்னால் நான் உண்மைக்குப் புறம்பாகச்
சொல்லவேண்டியிருக்கும். ஒன்று உண்மையைச் சொல்லிவிட
வேண்டும் அல்லது மௌனமாக இருந்துவிட
வேண்டும் என்பது என் கொள்கை.
இந்தக் கேள்விக்கு நான் மௌனமாக இருக்கிறேன்.
கேள்வி:
ரஜினிகாந்துக்கு இதில.....தமிழ் சினிமாவிற்கு அதிகம்
சிவாஜிகணேகனுக்கு இருந்தது…செல்வாக்கு அதிகம் இருந்தாலும்…தேர்தல்ல
தோல்வி அடைஞ்சாரு இப்போ அரசியலுக்கு வர்ற
ரஜினிகாந்த் வெற்றியடைவாருன்னு நீங்க நம்புறீங்களா?
வைரமுத்து: அதாவது,
அரசியல்…….கலை…என்ற அறிமுகத்தை
வைத்துக் கொண்டு அரசியலுக்கு வந்த
அத்தனைப் பேரும் வெற்றி பெறவுமில்லை…அத்தனைபேரும் தோற்றுப்போகவுமில்லை…அதற்குமேல் ஏதோ ஒன்று தேவைப்படுகின்றது…பார்ப்போம்.
கேள்வி:
தமிழ்நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும் என்ற
இந்த தமிழ் பேசும் ……நாட்ல…அதுல உங்க கருத்தென்ன?
வைரமுத்து:
இது நல்ல கருத்துதான்…தமிழ்நாட்டை
தமிழன்தான் ஆள வேண்டும் என்பது
நல்ல கருத்துதான். சில ஆண்டுகளுக்கு முன்பு
ரஜினிகாந்தை நோக்கி ஒரு கேள்வி
கேட்கப்பட்டது. தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும் என்கிறார்களே…அது குறித்து உங்கள்
கருத்து என்ன? நீங்கள் என்மீது
தொடுத்த இந்த வினா…ரஜினிகாந்த்
மீது தொடுக்கப்பட்டது…ரஜினிகாந்த் சொன்ன பதிலை உங்களுக்கு
சொல்லட்டுமா? இது நல்ல கருத்துதானே…ரஜினிகாந்த் சொன்னது…இது நல்ல கருத்துதானே
தமிழ்நாட்டை ஒரு நாடார்தான் ஆளவேண்டும்
என்று சொல்லாமல், தமிழ்நாட்டை ஒரு நாயக்கர்தான் ஆளவேண்டும்
என்று சொல்லாமல்… தமிழ்நாட்டை ஒரு பிள்ளைமகன்தான் ஆளவேண்டும்
என்று சொல்லாமல்… தமிழ்நாட்டை ஒரு தேவர்தான் ஆளவேண்டும்
என்று சொல்லாமல்… தமிழ்நாட்டை ஒரு தலித்தான் ஆளவேண்டும்
என்று சொல்லாமல்… தமிழ்நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும் என்று
சொல்வது உயர்ந்த கருத்துதானே…இப்படி அவர் சொன்னார்.
அந்த பதிலையே நான் மீண்டும் உங்களுக்கு
முன்வைக்கிறேன்.
கேள்வி:
கலையுலகத்துல வைரமுத்து அவர்களுக்கு ஒரு நண்பர்கள் கூட்டம்
இருப்பது போல அரசியலில் நீங்கள்
ஒரு கட்சி சார்ந்துதான் அவர்களுக்கு
ஆதரவா இருந்துட்டிருக்கீங்க…இந்த நிலையில ரஜினிகாந்த்
அரசியலுக்கு வந்துட்டா உங்க நிலைப்பாடு மாறுமா?
வைரமுத்து: திராவிட
உணர்வோடு, திராவிட அடிப்படையோடு வளர்ந்து கொண்டிருக்கிறவர்களில், வாழ்ந்து கொண்டிருக்கிறவர்களில் நானும் ஒருவன். நான்
தத்துவம் சார்ந்தவனே தவிர தனி மனிதனை
சார்ந்தவனல்ல…நான் தமிழ் சார்ந்தவனே
தவிர..கட்சி சார்;ந்தவன்
அல்ல…என் தத்துவங்களுக்கும் தமிழுக்கும்
தமிழ் உணர்வுக்கும் தமிழர் சாதியின் மேன்மைக்கும்
மெய்யாக யார் பாடுபட்டாலும் அவர்களை
நான் வரவேற்பேன்.
கேள்வி:
கலையுலகில ரஜினி கமல் இவர்களுக்கிடையே
ஒரு ஆரோக்கியமான போட்டியிருந்தது. சினிமாத்துறையில… அரசியல் துறையில அதே மாதிரி போட்டி
வரும்னு நினைக்கிறீங்களா? ரஜினிக்கும்…கமலுக்கும்…
வைரமுத்து:
இதை நீங்கள்..திரு.கமல் அவர்களிடம்
கேட்கலாம்.
கேள்வி:
ரஜினி அவர்களுக்கும் வரும்னு நினைக்கிறீங்களா?
வைரமுத்து:
இந்தக் கேள்விக்கும் சற்றே பொறுத்திருந்து பதில்
சொல்ல வேண்டும்.
கேள்வி:
தமிழர்களால…ரஜினிகாந்த்; தமிழ்நாட்டை ஆளக்கூடிய ஒரு வாய்ப்பு அமைந்தால்
அதையும் வரவேற்க தயாராக இருக்கிறார்களா?
வைரமுத்து:
ஒரு கருத்து. இந்தக் கருத்தை நீங்கள்
எப்படி எடுத்துக் கொள்ளப்போகிறீர்கள் என்று தெரியவில்லை. என்னுடைய பூர்வீகம் தமிழ்நாடு..அதனால் நான் அவரை
உயர்த்திப் பிடிக்கிறேன் என்று கருத வேண்டாம்.
அவர் சொன்ன பதிலைச் சொல்லுகிறேன்.
என்னுடைய பூர்வீகம் எனக்கு
தமிழ்நாடு. தமிழ்நாட்டிலிருந்து பிழைக்கப்போனவர்கள் என் பெற்றோர்கள். நான்
தர்மபுரி மாவட்டத்தைச் சார்ந்தவன். நான் ஆதியில் தமிழன்
என்று அவர் சொல்வதை நீங்கள்
மரபணுச் சோதனையில் சோதித்துப் பார்க்கக்கூடாது.
To view the audio-visual watch the youtube video in
Comments