....a moment in egmore railway station
தினசரிதான் கடந்துபோய்க்கொண்டிருக்கிறேன் அதே மனிதர்கள் அதே குரல்கள் அதே அழைப்புகள் இன்று வண்டி நின்ற இடமும் உட்கார்ந்திருந்த ஓரமும் அவர் நின்றிருந்த தோரணையும் யோசிக்க வைத்தது சுவற்றில் ஒட்டியிருக்கும் பல்லி போலத்தான் படியின் ஓரத்தில் மற்றவர்களுக்கு தொல்லையில்லாதபடி பர்பி அஞ்சு ரூபாய் இரண்டு பத்து ரூபாய் இடைவெளி விட்டு தடையில்லாத அழைப்புகள் இவர்கள் மற்றவர்களைப்போல் அல்ல தனக்கான வாழ்க்கையை தினசரி கட்டமைத்துக்கொள்கிறார்கள் பருவ மாறுதல்கள் இயற்கை உபாதைகள் ஹல்திராம்ஸ் லேய்ஸ் வகையறாக்கள் என எல்லாவற்றையும் கடந்து வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் குரல் அழைப்புகளை மட்டும் குறைத்துக் கொண்டதில்லை இரண்டு மூன்று நிறுத்தங்கள் சென்றபின் ஓரிடத்தில் குழுமும் மாற்றுத்திறனாளிகள் புறவைகளின் சரணாலயம் வேடந்தாங்கல் காணாதவர்களின் சரணாலயம் சைதாப்பேட்டை நடைமேடை