..while on a trip to rameswaram

தாமதமாகி விட்டதென்று
அவசரமாகப் படியிறங்கி செல்கையில்
நடக்க முடியாத மாற்றுத்திறனாளி
யாசகம் கேட்கிறார்
முன்பொருமுறை இதுபோல்
இராமேஸ்வரம் சென்றபொழுது
இரண்டு கால்களும் இழந்த
மாற்றுத்திறனாளி ….
திரும்பி வரும்பொழுது
ஏதேனும் கொடுக்கலாம் - அல்ல
இவ்வளவு கொடுக்கலாம்
என்று முடிவெடுத்திருக்கையில்
இடம் காலியாகியிருந்தது
அடுத்தமுறை நிச்சயம்
அந்த இடத்தில் அவர் இருந்தால்
முதல் வேலையாக
தாமதிக்காமல் கொடுக்கவேண்டும்
எண்ணங்கள் துரத்தியது
இரண்டு நாட்களுக்கு பின்னர்
படியிறங்குகின்ற இடத்தில்
நிச்சயம் ஏதேனும் தரவேண்டும்
எண்ணிக்கைப் பார்க்கக் கூடாது
தந்தபின் கணக்கு பார்க்கக் கூடாது
அதுபோல் அன்று அதேயிடத்தில்
கைகளில் சிக்கிய சில்லறைகளை
தந்துவிட்டு நடந்து கொண்டிருந்தேன்
வந்த வண்டியில் ஏறி
வீடு நோக்கி பயணம்
இந்த முறை நிச்சயமாய்
என் எண்ணங்களில்
அந்த மாற்றுத்திறனாளி நிறைந்திருக்கவில்லை
இன்னொருமுறை இராமேஸ்வரம் சென்றால்
நினைத்து வைத்ததை
நிறைவுடன் செய்துவிட வேண்டும்

Comments

Popular posts from this blog

IIT-Madras launches country’s first standing wheelchair

Complex pain relief surgery performed at private hospital

55-year-old man undergoes aortic valve replacement