....a moment in egmore railway station

தினசரிதான் கடந்துபோய்க்கொண்டிருக்கிறேன்
அதே மனிதர்கள்
அதே குரல்கள்
அதே அழைப்புகள்
இன்று
வண்டி நின்ற இடமும்
உட்கார்ந்திருந்த ஓரமும்
அவர் நின்றிருந்த தோரணையும்
யோசிக்க வைத்தது
சுவற்றில் ஒட்டியிருக்கும் பல்லி போலத்தான்
படியின் ஓரத்தில் மற்றவர்களுக்கு தொல்லையில்லாதபடி
பர்பி அஞ்சு ரூபாய்
இரண்டு பத்து ரூபாய்
இடைவெளி விட்டு
தடையில்லாத அழைப்புகள்
இவர்கள்
மற்றவர்களைப்போல் அல்ல
தனக்கான வாழ்க்கையை
தினசரி கட்டமைத்துக்கொள்கிறார்கள்
பருவ மாறுதல்கள்
இயற்கை உபாதைகள்
ஹல்திராம்ஸ் லேய்ஸ் வகையறாக்கள்
என எல்லாவற்றையும் கடந்து
வருவார்கள் என்ற நம்பிக்கையுடன்
குரல் அழைப்புகளை மட்டும்
குறைத்துக் கொண்டதில்லை
இரண்டு மூன்று நிறுத்தங்கள் சென்றபின்
ஓரிடத்தில் குழுமும் மாற்றுத்திறனாளிகள்
புறவைகளின் சரணாலயம் வேடந்தாங்கல்
காணாதவர்களின் சரணாலயம் சைதாப்பேட்டை நடைமேடை

Comments

Popular posts from this blog

IIT-Madras launches country’s first standing wheelchair

Complex pain relief surgery performed at private hospital

55-year-old man undergoes aortic valve replacement