தீநுண்மி தொற்று காலம்
அரசு இயந்திரங்களால் என்ன செய்ய முடியும், என்னவெல்லாம் செய்ய முடியும் என்பது இந்த தீநுண்மி தொற்று காலத்தில் ஓரளவிற்கு தெரிகிறது. ஊரடங்கு காலத்தில் காவல்துறையினரின் பணிகள் என்ன, பேரிடர் காலத்தில் வருவாய்த்துறையினர், மருத்துவத்துறையினர், பிற அரசு இயந்திரங்களின் பணிகள் என்ன என்பது ஊடகங்கள் மூலமாக மக்களுக்குத் தெரிந்தது. ஒரு அரசாங்கம் நினைத்தால் இதையெல்லாம் செய்யலாமா என்பது தெளிவாகிறது. அரசு தோட்டக்கலைத்துறை மூலமாக மக்களின் இருப்பிடத்திற்கே சென்று காய்கனி வகைகளை சேர்க்க முடிகிறது. விளைபொருட்களை நேரடியாக கொள்முதல் செய்து, மூன்றாம் நபர் தலையீடுயின்றி அரசு இயந்திரம் மூலமாக நேரடியாக மக்களுக்கே போய்ச்சேரும் வண்ணம் இத்திட்டம் வெற்றியும் அடைந்திருக்கிறது. இது ஒருவகையில் உழவர் சந்தையின் மறுஆக்கம் எனக்கூடச் சொல்லலாம். குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருளும், பணமும் தர முடிகிறது, அதுவும் பணத்தை நேரடியாக மக்களுக்கே வீடுதோறும் சென்று கொடுக்கும் பணியும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பொருட்களை பிறகு வாங்கிக் கொள்ளலாம், பணத்தை உடனே வாங்கிக் கொள்வோம் என்று மக்கள் அவசரப்படுவது தெ...