தீநுண்மி தொற்று காலம்
அரசு இயந்திரங்களால் என்ன செய்ய முடியும், என்னவெல்லாம் செய்ய முடியும்
என்பது இந்த தீநுண்மி தொற்று காலத்தில் ஓரளவிற்கு தெரிகிறது. ஊரடங்கு
காலத்தில் காவல்துறையினரின் பணிகள் என்ன, பேரிடர் காலத்தில்
வருவாய்த்துறையினர், மருத்துவத்துறையினர், பிற அரசு இயந்திரங்களின் பணிகள்
என்ன என்பது ஊடகங்கள் மூலமாக மக்களுக்குத் தெரிந்தது. ஒரு அரசாங்கம்
நினைத்தால் இதையெல்லாம் செய்யலாமா என்பது தெளிவாகிறது. அரசு
தோட்டக்கலைத்துறை மூலமாக மக்களின் இருப்பிடத்திற்கே சென்று காய்கனி
வகைகளை சேர்க்க முடிகிறது. விளைபொருட்களை நேரடியாக கொள்முதல் செய்து,
மூன்றாம் நபர் தலையீடுயின்றி அரசு இயந்திரம் மூலமாக நேரடியாக மக்களுக்கே
போய்ச்சேரும் வண்ணம் இத்திட்டம் வெற்றியும் அடைந்திருக்கிறது. இது
ஒருவகையில் உழவர் சந்தையின் மறுஆக்கம் எனக்கூடச் சொல்லலாம். குடும்ப
அட்டைதாரர்களுக்கு பொருளும், பணமும் தர முடிகிறது, அதுவும் பணத்தை
நேரடியாக மக்களுக்கே வீடுதோறும் சென்று கொடுக்கும் பணியும்
நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பொருட்களை பிறகு வாங்கிக் கொள்ளலாம்,
பணத்தை உடனே வாங்கிக் கொள்வோம் என்று மக்கள் அவசரப்படுவது தெரிகிறது.
அனைத்துக் கட்சிக்காரர்களும், ஏன் அடுத்து வரப்போகின்ற உள்ளாட்சி மன்ற
தேர்தலில் உத்தேசமாக போட்டியிடக்கூடிய நபர்களோ, கணவர்களின்
மனைவிமார்களோ, மனைவியின் கணவன்மார்களோ, வீடுதோறும் அரிசி,
எண்ணெய், பருப்பு மற்றும் காய்கறி வகைகளை தருகிறார்கள்.
இது ஒருவகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்கள் இல்லம் தேடி இலவசமாக
பொருட்களை சேர்ப்பிக்கும் வேலைதான் இது. ஒரு சில கட்சிகளின் தேர்தல்
அறிக்கையில் இடம்பெற்று, அவர்கள் வெற்றி பெற்ற தருணத்தில் அவர்களின்
தொகுதியில் நடைமுறைப்படுத்தினார்களோ இல்லையோ, இன்று எல்லா
கட்சிக்காரர்களும் தமிழ்நாடு முழுக்க இந்த மக்கள் சேவையை
நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள். இது எல்லா ஊடகங்கள் மற்றும் அச்சு
பிரதிகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில், தேர்தல்
அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகள், அந்தக் கட்சி ஆட்சியில் அமர
முடியவிட்டாலும் கூட, அவர்கள் வெற்றிப் பெற்ற தொகுதியில் நடைமுறைப்படுத்த
வேண்டும். இப்பொழுது தேர்தல் அறிக்கை என்பது தமிழ்நாடு முழுக்க ஒன்றாகவும்,
தொகுதிக்கு தொகுதி ஒவ்வொன்றாகவும் இருக்கிறது. ஊரடங்கு காலத்தில்
இருந்ததைப் போல், பள்ளிä, கல்லூரிகளுக்கு வருடத்திற்கு ஒரு மாதம் விடுப்பு
போன்று, அரசு முன்னறிவிப்பின்றி வருடத்திற்கு ஒரு மாதம் மதுபானக் கடைகளை
மூடுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அந்த குறிப்பிட்ட மாதத்தில் வாகன
தணிக்கைளும் கடுமையாகக் கடைபிடிக்க வேண்டும். தீநுண்மி தொற்றுக் காலம்
சில செய்திகளை நமக்கு தந்துவிட்டு சென்றிருக்கிறது. அதிகாரங்களில் உள்ளவர்கள்
முயற்சி எடுத்தால் சிந்தனைகள் செயல்வடிவம் பெறும். நம் சந்ததிகள் சிறப்புடன்
வாழ்வார்கள்.
Comments