சிவபுராணம் பாடல் வரிகள்

நமச்சிவாய வாஅழ்க! நாதன்றாள் வாழ்க!

இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் றாள்வாழ்க!

கோகழி ஆண்ட குருமணிதன் றாள்வாழ்க!

ஆகமம் ஆகிநின் றண்ணிப்பான் றாள்வாழ்க!

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க!

வேகங் கெடுத்துஆண்ட வேந்தன்அடி வெல்க

பிறப்புஅறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க

புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க

கரங்குவிவார் உண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க

சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க.

ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி

தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி

நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி

மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி

சீரார் பெருந்துறைநந் தேவன் அடிபோற்றி

ஆராத இன்பம் அருளும்மலை போற்றி.

சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்

அவன்அரு ளாலே அவன்றாள் வணங்கிச்

சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை

முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பனியான்

கண்ணுதலான் றன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி

எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி

விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்

எண்ணிறந் தெல்லை இலாதானே நின்பெருஞ்சீர்

பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்.

புல்லாகிப் பூடாய்ப் புழவாய் மரமாகிப்

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்

உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற

மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்

ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே.

வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா

பொய்யாயின வெல்லாம் போயகல வந்தருளி

மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே

எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே

அஞ்ஞானந் தன்னை அகல்விக்கு நல்லறிவே.

ஆக்கம் அளவிறுதி யில்லாய் அனைத்துலகும்

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருடருவாய்

போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்றொழும்பில்

நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே

மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே

கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்

சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று

பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்.

நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த

மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் றன்னை

மறைந்திட மூடிய மாய இருளை

அறம்பாவம் என்னும் அருங்கயியற்றாற் கட்டிப்

புறந்தோல்போர்த் தெங்கும் புழு அழுத்கு மூடி

மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை

மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய

விலங்கு மனத்தால் விமலா உனக்குக்

கலந்தஅன் பாகிக் கசிந்துள் உருகும்

நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி

நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே.

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே

தேசனே தேனார் அமுதே சிவபுரனே

பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே

நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சங்கெடப்

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே

ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே

ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே

நீராய் உருக்கிஎன் ஆருயியராய் நின்றானே

இன்பமுந் துன்பமு; இல்லானே உள்ளானே

ஆன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாம்

சோதியனே குன்னிருளே தோன்றாப் பெருமையனே

ஆதியனே அந்த நடுவாகி அல்லானே

ஈர்த்தென்னை ஆடகொண்ட எந்தை பெருமானே

கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின்

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே

போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே

காக்கும்எங் காவரனே காண்பரிய பேரொளியே

ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற

தோற்றச் சுடடிராளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்

மாற்றமாம் வையகத்தின் வௌ;வேறே வந்தறிவாந்

தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்

ஊற்றான உண்ணா ரமுதே உடையானே.

வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப

ஆற்றேன்எம் ஐயா அரனேயோ என்றென்று

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்பெட்டு மெய்யானார்

மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே

கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே

நள்ளிருளின் நட்டம் பயின்றாடும் நாதனே

தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நான்டானே

அல்லற் பிறவி அறுப்பானே யோவென்று

சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து.



குறிப்பு: மேற்கண்ட சிவபுராணம் பாடல் வரிகள், மறைமலையடிகளின் திருப்புகழ் தெளிவுரையிலிருந்து எடுக்கப்பட்டது. பதிப்பக வெளியீடு: பூம்புகார் பதிப்பகம்.

Comments

Popular posts from this blog

CyberPsychology & Behavior

IIT-Madras launches country’s first standing wheelchair

Two cancer patients from Bangladesh undergo robotic surgery in city hospital